22 Jan 2025

மம்மூட்டி, பிருத்விராஜ் படங்களை நிராகரித்தது ஏன்? 

Credit: Instagram

மிஷ்கினின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அவருக்கு வசந்த பாலனின் வெயில் திருப்புமுனையாக அமைந்தது.

தொடர்ந்து தீபாவளி, ஆர்யா, ராமேஸ்வரம், வாழ்த்துகள் போன்ற தமிழ் படங்கலில் நடித்தார்.

அவரது நடிப்பில் ஜெயம் கொண்டான் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

அஜித்திற்கு ஜோடியாக அசல் படத்தில் அவர் நடித்தார்.

மலையாளம், தமிழைத் தொடர்ந்து கன்னடத்திலும் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் பிருத்விராஜ், மம்மூட்டி ஆகியோரின் படங்களை நிராகரித்தது குறித்து தெரிவித்துள்ளார்.

மலையாள திரையுலகில் இருந்து விலகியிருக்க வேண்டும் என தோன்றியது என்றார்.

மலையாளத்தில் நடிக்காமல் இருந்தபோது நிம்மதியாக உணர்ந்தேன் என்றுதெரிவித்தார்.

இதனால் மம்மூட்டி, பிருத்வி ராஜ் படங்களையும் நிராகரித்தேன் என அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.