22 OCT 2026
Credit: Getty
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கும்.
மின்சாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் என பலவற்றும் அட்டகாசமான சலுகைகள் வழங்கப்படுவதன் காரணமாக பலரும் பண்டிகை காலத்தில் பொருட்களை வாங்குவர்.
முன்பெல்லாம் வெறும் கடைகள் மட்டும் வழங்கி வந்த இந்த சலுகைகளை தற்போது ஆன்லைன் தளங்கள் மற்றும் செயலிகளும் வழங்கி வருகின்றன.
இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஆன்லைன் சேலில் பொதுமக்கள் ஏராளமான பொருட்களை வாங்குகின்றனர்.
இந்த சேல்களில் பொருட்களை வாங்குவது சற்று லாபரகமானதாக இருந்தாலும் அதில் சில சிக்கல்களும் உள்ளன.
அதாவது, இந்த பண்டிகை காலங்களை பயன்படுத்தி மோசடிக்காரர்கள் போலி தள்ளுபடி மற்றும் சிறப்பு அம்சங்களை அறிவிக்கின்றன.
அதனை நம்பி அந்த தளங்களிலோ அல்லது மொபைல் எண்களை தொடர்ப்புக்கொள்ளும் பொதுமக்கள் மோசடியில் சிக்கிக்கொள்கின்றன.
எனவே தான் இத்தகைய பண்டிகை கால சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் எந்த ஒரு பொருளை ஆர்டர் செய்யும்போதும், அந்த நிறுவனம் நம்பகத்தன்மை கொண்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இத்தகைய மோசடிகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் என்பதால், பொதுமக்கள் கேஷ் ஆன் டெலிவரி அம்சத்தில் ஆர்டர்களை மேற்கொள்வதும் ஒரு சிறப்பான முடிவாக இருக்கும்.