22 SEP 2026

தினமும் ABC ஜூஸ் குடிப்பவரா நீங்கள்... இது தெரியுமா?

Credit: Getty

ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஆகியவை இணைந்த ABC ஜூஸ் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தரும் சிறந்த பானமாகும்.

அறிமுகம்

இதில் நிறைந்துள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் சிங் சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பெருமளவில் பலப்படுத்துகின்றன.

நோய் எதிர்ப்பு

கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, இரத்த ஓட்டத்தைச் சீராக்க இது பெரிதும் உதவுகிறது.

நச்சுநீக்கம்

சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி, முகத்திற்கு இயற்கையான அழகையும் பொலிவையும் அளிக்கிறது.

பொலிவு

அதிக நார்ச்சத்து கொண்டிருப்பதால் செரிமானப் பாதையைச் சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சினையைத் தடுக்கிறது.

செரிமானம்

இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் தாதுக்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

இதயம்

பீட்ரூட் மற்றும் கேரட்டில் இயற்கைச் சர்க்கரை அதிகம் உள்ளதால், நீரிழிவு நோயாளிகள் இதனை அளவோடு குடிப்பது நல்லது.

சர்க்கரை

ஆக்சலேட் சத்து அதிகமாக இருப்பதால், சிறுநீரகக் கல் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

கிட்னி

வெறும் வயிற்றில் தொடர்ந்து அதிக அளவில் குடிக்கும்போது சிலருக்கு வயிற்றுப்போக்கு அல்லது வாயுத்தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது.

வயிறு

தினமும் குடிப்பதற்குப் பதிலாக வாரத்தில் 3-4 நாட்கள் மட்டும் மிதமான அளவில் குடிப்பதே உடலுக்குப் பாதுகாப்பானது.

அளவு