28 Jan 2025
Credit: Freepik
காலையில் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலுக்கும் மனதுக்கும் மிகவும் நன்மை பயக்கும்.
தினந்தோறும் நடப்பது எடையை கட்டுக்குள் வைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
நடைப்பயிற்சியின்போது எண்டோர்பின் ஹார்மோன்கள் வெளியிடப்படுகின்றன. இது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
காலையின் நடைப்பயிற்சி மேற்கொள்வது நாள் முழுவதும் புத்துணர்ச்சியையும், தேவையான சுறுசுறுப்பையும் தருகிறது.
காலையில் சூரிய ஒளியில் செல்லும்போது உடலின் சர்க்காடியன் தாளத்தை அமைத்து, இரவில் ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.
காலை சூரிய ஒளி உடலில் படும்போது வைட்டமின் டி உற்பத்தி செய்யப்படுகிறது. இது எலும்புகளுக்கு அவசியம்.
தினமும் நடப்பது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது சிறு சிறு நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
தினமும் நடக்கும்போது மூளை அதிக ஆக்ஸிஜனை பெறுகிறது. இது நினைவாற்றல் மற்றும் கவனத்தை மேம்படுத்தும்.
காலை நடைப்பயிற்சி மலச்சிக்கல் போன்ற வயிற்று பிரச்சனைகளை போக்கும்.
தினமும் நடப்பது சர்க்கரை, புற்றுநோய் போன்ற நோய்களின் அபாயத்தை கணிசமாக குறைக்கிறது.