15 Jun 2025
Credit: Freepik
ராகியில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்துக்கள் மிக அதிகமாக நிறைந்துள்ளன. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் செரிமானத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
இதனை உணவாக உட்கொள்ளும்போது வயிறு நிறைந்த உணர்வு நீண்ட நேரம் நீடிக்கும். இதனால் தேவையின்றி அடிக்கடி பசி ஏற்படுவது முழுமையாகத் தடுக்கப்படுகிறது.
ராகியில் உள்ள நார்ச்சத்தின் காரணமாக உங்களுக்கு விரைவாக பசி எடுக்காது. அடிக்கடி கண்ட உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்த்து ஆரோக்கியத்தைக் காக்கலாம்.
கன்னாபின்னாவென்று எதையும் சாப்பிடுவதைத் தவிர்ப்பதால் உடல் எடை அதிகரிக்காது. உடல் எடையை சீராகவும் ஆரோக்கியமாகவும் பராமரிக்க இது பெரிதும் உதவுகிறது.
கேழ்வரகில் உடலுக்கு இன்றியமையாத புரதச்சத்துக்கள் மிக அதிகளவில் நிறைந்துள்ளன. இந்த புரதச்சத்துக்கள் நம் உடலில் புதிய தசைகளை உருவாக்க உதவுகின்றன.
ராகியை அன்றாட உணவில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு எரிக்கப்படும். இது கொழுப்பைக் குறைத்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வழிவகுக்கிறது.
ராகியால் உருவாகும் வலுவான தசைகள் உடலில் அதிக கொழுப்பை எரிக்க உதவுகின்றன. உடல் தடிமனாவதைத் தடுத்து தசை நார்களை உறுதியாக்கும்
உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் ராகி உட்கொள்ளும் அளவை உணவு நிபுணரிடம் ஆலோசிக்க வேண்டும்.
ராகியை எந்த வடிவில் சாப்பிட்டாலும் உடலில் இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். திடீரென உடலில் சுகர் அளவு உயராமல் தடுக்க இது பெரிதும் உதவுகிறது.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும். இன்சுலின் சுரப்பைச் சீராக்கி உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது.