12 Feb 2025
Credit: Freepik
பப்பாளி சாப்பிடுவது உடலுக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கும்.
பப்பாளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பப்பேன் நொதி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன.
இது செரிமானத்தை மேம்படுத்துதல், எடை குறைத்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் மற்றும் மலச்சிக்கல் இருந்து நிவாரணத்தை தரும்.
பப்பாளி சாப்பிடுவது உடலின் செரிமான அமைப்பை மேம்படுத்தும். இதிலுள்ள பப்பேன் நொதி அஜீரணத்தை போக்கும்.
காலையில் வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவது எடையை கட்டுப்படுத்த உதவும்.
பப்பாளியில் உள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் குடலை நன்கு சுத்தம் செய்து மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் தரும்.
பப்பாளியில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ கண்பார்வையை அதிகரிக்கும். கண்புரை அபாயத்தை குறைக்கும்.
பப்பாளி சாப்பிடுவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது தொற்று நோய் பிரச்சனையில் இருந்து பாதுகாக்கும்.
டெங்கு காய்ச்சலின்போது பப்பாளி இலை சாறு குடிப்பதால் உடலில் ஒயிட் பிளேட்லெட்டுகள் அதிகரிக்கும்.
பப்பாளி விதைகள் கல்லீரலையும் செரிமானத்தையும் நச்சு நீக்குகின்றன.