27 May 2025
Credit: Freepik
உணவை வேகவைப்பதன்மூலம் உணவில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்களைக் கொன்றுவிடுகிறது.
வேகவைத்த உணவுகளை சாப்பிடுவது உணவு நஞ்சாக மாறுவதைத் தடுக்கின்றன.
வேக வைப்பதன் மூலம், உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களைப் பாதுகாக்க முடியும்.
வேகவைத்த உணவுகளில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடை குறைய உதவுகிறது.
அவித்த முட்டைகள் புரதச்சத்தின் சிறந்த மூலமாகும். அவை தசைகளைச் சரிசெய்யவும் ஆற்றலை வழங்கவும் உதவுகின்றன.
பருப்பு, பட்டாணி மற்றும் கொண்டைக்கடலை போன்ற வேகவைத்த பயறு வகைகள் புரதம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து ஆகியவற்றின் சிறந்த மூலமாகும்.
வேகவைத்த பயறுகள் ஆற்றலை வழங்குவதற்கும் செரிமானத்தை மேம்படுத்துவதற்கும் நன்மை பயக்கின்றன.
வேகவைத்த கீரையில் புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் கே மற்றும் கால்சியம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
வேகவைத்த கீரையில் உடலுக்கு வலிமையைத் தருகிறது, இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது மற்றும் எலும்புகளை வலுப்படுத்துகிறது.
வேகவைத்த உருளைக்கிழங்கில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை செரிமானத்தை மேம்படுத்தும்.