23 Apr 2025

கோடையில் சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

Credit: Freepik

கோடையில் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும்.

நீர்ச்சத்து

சீரக நீரில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இவை கோடையில் பல ஆரோக்கிய நன்மைகளை தரும்.

நன்மை

வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடித்தால், நாள் முழுவதும் போதுமான ஆற்றலை அளிக்கும்.

ஆற்றல்

ஒரு செம்பு தண்ணீரில் 2 ஸ்பூன் சீரகத்தை போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். அது சற்று ஆறியதும் குடிக்கவும்.

சீரகம்

சீரக நீரை தொடர்ந்து குடிப்பது உங்கள் கல்லீரலில் திறம்பட நச்சு நீக்கம் செய்ய முடியும்.

நச்சு நீக்கம்

தினமும் சீரக நீர் அருந்துவது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, கோடையில் ஏற்படும் குமட்டல், வாந்தியை குறைக்கும்.

செரிமானம்

சீரக நீரில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் இரத்த சோகையை எதிர்த்து போராட உதவி செய்யும்.

இரத்த சோகை

சீரக நீர் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, பல உடல்நல பிரச்சனைகளை தடுக்க உதவும்.

பிரச்சனை

காலையில் வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் அருந்துவது உடல் எடையை எளிதாக குறைக்க உதவும்.

உடல் எடை

சீரக தண்ணீரில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை எரிக்க உதவும். 

ஊட்டச்சத்து