27 Jan 2025
Credit: Freepik
தினமும் இரவில் ஒரு டம்ளர் சூடான பால் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
பாலில் கால்சியம், புரதம், வைட்டமின் டி மற்றும் பொட்டாசியம் இருப்பதால், எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்தும்.
இரவில் பால் குடிப்பது மூளையை அமைதிப்படுத்தும். இது நன்றாக தூங்கவும், சோர்வை குறைக்கவும் உதவி செய்யும்.
டிரிப்டோபன் மெலடோனின் சுரப்பை அதிகரித்து வேகமாக தூங்க வைக்க உதவி செய்யும்.
பால் குடிப்பது இரவில் பசியை கட்டுப்படுத்தி, வயிறு நிரம்பிய உணர்வை தரும். இது எடையை குறைக்க உதவி செய்யும்.
பாலில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆஸ்டியோபோரோசிஸிலிருந்து பாதுகாத்து, எலும்புகள் மற்றும் பற்களை பலப்படுத்தும்.
இரவில் பால் குடிப்பதன் மூலம் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கு உதவி செய்யும்
பாலில் உள்ள செரோடோனின் மனதை அமைதிப்படுத்துகிறது. இது மன அழுத்தத்தை குறைத்து தூக்கத்தை மேம்படுத்தும்.
பாலில் காணப்படும் வைட்டமின் ஏ மற்றும் ஆக்ஸினேற்றிகள் சருமத்தை ஈரப்பதமாக வைத்து சுருக்கங்களை குறைக்கும்.
பாலில் உள்ள வைட்டமின் பி12 மற்றும் துத்தநாகம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன.