20 OCT 2026
Credit: Getty
என்னதான் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் அபராத வளர்ச்சி அடைத்து, அதன் மூலம் பல்வேறு அசாத்திய நிகழ்வுகள் அரங்கேறி வியப்பை ஏற்படுத்தினாலும்.
அதே தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி நடைபெறும் மோசடி மற்றும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஆன்லைன் மோசடியில் சிக்கி இந்திய குடிமக்கள் சுமார் ரூ.1,000 கோடி பணத்தை இழந்துள்ளனர்.
இந்த மோசடிகள் குறித்து சைபர் கிரைம் போலீஸ் தொடர்ந்து விழுப்புணர்வை ஏற்படுத்தினாலும், இத்தகைய மோசடிகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
எப்படி எல்லாம் யோசித்து மக்களிடம் பணத்தை பறிக்கலாம் என மோசடிகள் திட்டமிடுவதன் காரணமாக புதிய புதிய மோசடிகள் அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில் தான், சமீபத்தில் ஒரு புதிய வகை மோசடி ஒன்று வெளிச்சத்திற்கு வந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, கூகுள் ரிவ்யூ செய்வது மற்றும் யூடியூப் வீடியோக்களை பார்ப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்ற மோசடி தான் அது.
இந்த மோசடி கும்பல்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம மூலம் மக்களை அணுகி அவர்களை மோசடி வலையில் விழ வைக்கின்றன.
அதாவது, ரிவ்யூ எழுதி அதனை ஸ்கிரீன்ஷாட் செய்து அனுப்பினால் பணம் தரப்படும் என கூறி, முதல் ஸ்கிரீன்ஷாட்டுக்கு மட்டும் பணம் அனுப்புவார்கள்.
அடுத்தது முதலீடு செய்தால் தான் ரிவ்யூ எழுதி பணம் பெற முடியும் என கூறி நம்பகமற்ற தளங்களில் முதலீடு செய்ய வைத்து மோசடி செய்வார்கள்.