16 April 2025
Credit: Getty Image
கோடைகாலம் துவங்கினாலே சட்டென நினைவுக்கு வருவது தர்பூசணி பழம்.
தர்பூசணி உடலுக்கு குளிர்ச்சியையும் புத்துணர்வையும் அளிக்கிறது.
தர்பூசணியில் 90 முதல் 92 சதவீதம் வரை நீர்ச்சத்து நிறைந்துள்ளது. கோடை மாதங்களில் உடல் வறட்சியடையாமல் பாதுகாக்க இது உதவுகிறது.
மேலும், வைட்டமின் C, வைட்டமின் A, வைட்டமின் B6, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
ஆனால் ஆயுர்வேதத்தின்படி தர்பூசணியை குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட்டால் உடலுக்கு சிக்கல் ஏற்படலாம்.
ஆயுர்வேதத்தின் படி, தர்பூசணி சாப்பிடுவதற்கு மிகவும் உகந்த நேரம் பிற்பகல் வேளையாகும்.
பிற்பகலில் நம் உடலின் வளர்சிதை மாற்றம் உச்ச நிலையில் இருக்கும்; இதனால் தர்பூசணி எளிதாகச் செரிமானம் அடையும்.
இரவில் தர்பூசணி சாப்பிடுவது செரிமானம் தொடர்பான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.