Credit: Instagram
05 october 2026
Credit: Instagram
தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு என பான் இந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குநராக இருந்துவருபவர்தான் அட்லீ.
தமிழில் ஆரம்பத்தில் குறும்படம் இயங்கிவந்த இவர், ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் இயக்குநரானார்.
இவர் அதற்கு முன், தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தார்.
இவர் உதவி இயக்குநராக ஷங்கரின் எந்திரன் மற்றும் நண்பன் போன்ற பல திரைப்படங்களில் பணியாற்றி பிரபலமானார்.
இவருக்கு ராஜா ராணி படம் வெற்றியை கொடுக்க, முதல்வர் விஜயை வைத்து தெறி என்ற திரைப்படத்தை இயக்கி ஹிட் கொடுத்திருந்தார்.
இதன் பிறகு தமிழில் தளபதி விஜயை வைத்து மெர்சல், பிகில் என தொடர்ந்து 3 படங்களை அடுத்தடுத்து தளபதியுடன் இணைந்திருந்தார்.
இதற்கு பின் இவரின் பார்வை இந்தி சினிமாவின் பக்கம் சென்ற நிலையில், ஷாரூக்கானுடன் தனது ஜவான் படத்தை இயக்கியிருந்தார்.
ஷாரூக்கானுடன் பணியாற்றிய ஜவான் படமானது இவருக்கு பான் இந்திய சினிமா அளவிற்கு பிரபலத்தையும், பிரம்மாண்டத்தையும் கொடுத்தது.
தற்போது அல்லு அர்ஜுனின் ராக்கா படத்தை இயக்குகிறார். இதுவும் பான் இந்திய படமாக உருவாகிறது. மேலும் ஜேசன் சஞ்சயை வைத்து படம் பண்ணுவது பற்றி பேசியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அட்லீ, ஜேசனுடன் படம் பண்ணுவோம், தம்பி நம்ம தம்பிதான். எதிர்கலாத்தில் அமையும்போது பண்ணுவோம், நம்ம பயதான் என்றார்.