27 August 2026

மாஸ்டர் பட கிளைமேக்ஸை அவர்தான் இயக்கினார்- அர்ஜுன்தாஸ்!

Credit: Instagram

தென்னிந்திய மொழிகளில் நாயகனாக நாயகனாக மற்றும் படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களை தன்பால் ஈர்த்துவருபவர்தான் அர்ஜுன் தாஸ்.

இவர் கடந்த 2012ம் ஆண்டில் இயக்குநர் ராஜேஷ் கண்ணாவின் இயக்கத்தில் வெளியான பெருமான் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார்.

பின் தனது 2வது திரைப்படத்திலே தெலுங்கு சினிமாவில் நுழைந்தார். ஆக்சிஜன் என்ற படத்தில் அஜய் என்ற வேடத்தில் நடித்தார்.

இதன் பின் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கைதி என்ற படத்தில் அன்பு என்ற கேரக்டரில் நடித்தார்.இதன் மூலமே இவருக்கு பிரபலம் கிடைக்க தொடங்கியது.

தனது கனத்த குரலினாலும், தோற்றத்தினாலும் ரசிகர்ளை கவர தொடங்கினார் அர்ஜுன்தாஸ். இவர் லோகேஷ் கனகராஜின் LCU-விலும் இருக்கிறார்.

அதிலும், முதலமைச்சர் விஜய் நடிப்பில் 2021ம் ஆண்டில் வெளியான மாஸ்டர் என்ற படத்தில் தாஸ் என்ற நெகடிவ் வேடத்தில் நடித்து வரவேற்பை பெற்றார்.

இதன் பிறகு சினிமாவில் லீட் நாயகனாகவே அர்ஜுன்தாஸ் நடிக்க தொடங்கினார். அநீதி, போர் மற்றும் ரசவாதி போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார்.

பிறகு அஜித் குமாருக்கு எதிரியாக குட் பெட் அக்லி படத்தில் நடித்து, மேலும் பாடலில் நடனமாடி மேலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்த 2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் 2வது படம்தான் ஒன்ஸ் மோர். காதல் கதையில் உருவாகிய இது, 28/08/2026 அன்று வெளியாகிறது.

சமீபத்தில் பேட்டியில் பேசிய அர்ஜுன்தாஸ், மாஸ்டர் பட கிளைமேக்ஸ் காட்சியை, முதல்வர் விஜயதான் இயக்கினார் என தெரிவித்துள்ளார்.