07 NOV 2026
Credit: Getty
22 NOV 2026
Credit: Getty
மனிதர்களின் வாழ்வில் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட ஸ்மார்ட் சாதனங்கள் அன்றாட வாழ்வின் அங்கமாக மாறிவிட்டன.
காலை எழுந்தது முதல் இரவு உறங்க செல்லும் வரை ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் பழக்கம் பலருக்கும் உள்ளது.
தூங்கும் வரை மட்டுமன்றி, தூக்கத்திலும் பலர் தங்களது ஸ்மார்ட்போன்களை படுக்கைக்கு அருகேயே வைத்துக்கொள்கின்றனர்.
இன்னும் சிலரது வீட்டின் படுக்கை அறைகளில் ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட ஸ்மார்ட் சாதனங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு படுக்கை அறைகளில் வைக்கப்படும் ஸ்மார்ட் சாதனங்கள் ஹேக் செய்யப்படும் பட்சத்தில் நிலமை தலைகீழாக மாறிவிடும்.
சாதனத்தில் உளவு மென்பொருள் அல்லது தொலைநிலைக் கட்டுப்பாட்டு மென்பொருள் நிறுவப்பட்டு தேவையான அனுமதிகள் இருந்தால் தொலைவில் இருந்தே பயன்படுத்த முடியும்.
உதாரணமாக கேமராவை ஹேக் செய்ய முடிந்தால் முன் பக்கம் அல்லது பின் பக்க கேமராவை ஆன் செய்து வீடியோ பதிவு செய்ய முடியும்.
ஒருவேளை உங்களது ஸ்மார்ட் சாதங்களில் உள்ள மைக்கை ஹேக் செய்தால் நீங்கள் பேசுவதை பதிவு செய்ய முடியும்.
இது வெறும் தனிமனித பாதுகாப்பு மட்டுமன்றி, அந்தரங்கம் தொடர்பானவை பதிவு செய்யப்பட்டு பாலியல் தளங்களில் பதிவேற்றப்படலாம்.
நீங்கள் அறையில் வைக்கப்பட்டு இருக்கும் ஆவணங்கள் அல்லது செயலிகளில் இருக்கும் ஆவணங்கள் திருடப்பட்டாலோ அதன் மூலமும் மோசடி அரங்கேறும்.