01 OCT 2026

நகத்தைக் கடித்துத் தள்ளுறீங்களா? தப்பை மட்டும் பண்ணாதீங்க!

Credit:Getty

அடிக்கடி நகம் கடிக்கும் பழக்கம் நகத்தைச் சுற்றியுள்ள சருமத்தில் காயத்தையும் கிருமித் தொற்றையும் ஏற்படுத்துகிறது.

பழக்கம்

நகத்தின் ஓரங்களில் ஏற்படும் சிறிய வெட்டுகள் வழியே கிருமிகள் புகுந்து உருவாகும் தொற்றே நகச்சுற்று (Paronychia) ஆகும்.

நகச்சுற்று

நகத்தைச் சுற்றி திடீரென ஏற்படும் வீக்கம், சிவத்தல், கடும் வலி மற்றும் சீழ் பிடித்தல் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

அறிகுறிகள்

தொற்று தீவிரமடையும் போது சிலருக்கு காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

காய்ச்சல்

நகச்சுற்றுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கத் தவறினால், அந்தத் தொற்று பிற பகுதிகளுக்கும் வேகமாகப் பரவும்.

பரவுதல்

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்நோய் ஏற்பட்டால் தொற்று மேலும் தீவிரமடையும் என்பதால் கூடுதல் கவனம் தேவை.

நீரிழிவு

நகம் கடித்தல், நகத் தோலை உரித்தல் மற்றும் முறையற்ற நக அலங்காரம் (Manicure) போன்றவற்றால் பாதிப்பு அதிகரிக்கும்.

காரணங்கள்

கடுமையான நகச்சுற்றுப் பிரச்சனை ஏற்படுவதற்குச் சில வகை பாக்டீரியாத் தொற்றுகளே முக்கியக் காரணமாக அமைகின்றன.

பாக்டீரியா

கைகள் எப்போதும் நீரிலும் ஈரப்பதம் நிறைந்த சூழலிலும் இருக்கும் நபர்களுக்கு நாள்பட்ட நகச்சுற்று வர அதிக வாய்ப்புள்ளது.

ஈரப்பதம்

நகம் கடிப்பதையும் தோலை உரிப்பதையும் தவிர்த்து, கைகளையும் நகங்களையும் எப்போதும் சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருக்க வேண்டும்.

பாதுகாப்பு