28 AUG 2026

மீண்டும் பண பரிவர்த்தனைக்கு மாறும் சாமானியர்கள்?

Credit: GETTY

முன்பெல்லாம் கையில் பணம் வைத்து செலவு செய்யும் பழக்கம் தான் பரவலாக இருந்தது. ஆனால், தற்போது அப்படி அல்ல.

பணம்

ரூ.10 முதல் ரூ.10,000 வரை என பெரும்பாலான பண பரிவர்த்தனைகளை பொதுமக்கள் யுபிஐ மூலமே மேற்கொள்கின்றனர். 

யுபிஐ

இவ்வாறு யுபிஐ பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக பலரும் கையில் பணத்தை வைத்து செலவு செய்யும் பழக்கத்தையே மறந்துவிட்டனர். 

செலவு

அந்த அளவுக்கு பொதுமக்களின் அன்றாட வாழ்வின் முக்கிய அங்கமாக யுபிஐ மாறியுள்ளது. இந்த நிலையில் தான், ஷாக் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

முக்கிய சேவை

அதாவது, பொதுமக்கள் யுபிஐ பயன்படுத்துவதை விடுத்து மீண்டும் பணம் கொடுத்து பரிவர்த்தனை செய்யும் முறைக்கு மாறி வருவதாக கூறப்படுகிறது. 

பண  பரிவர்த்தனை

ஹோம் கிரெடிட் என்ற நிறுவனம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தி, தி கிரேட் இந்தியன் வாலெட் 4.0 என்ற அறிக்கையை வெளியிட்டது.

ஹோம் கிரெடிட்

அதில் மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை எப்படி பயன்படுத்துகின்றனர் என்பது தொடர்பான தகவல்கள் இருந்தன. 

டிஜிட்டல்

18 வயது முதல் 55 வயதுக்கு உட்பட்ட ரூ.35,000 வரை வருமானம் ஈட்டும் நடத்தர வர்க்கத்தினர் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர்.

சாமானியர்கள்

2025 ஆம் ஆண்டில் வெறும் 43 சதவீதத்தினர் மட்டுமே நேரில் சென்று கட்டணம் செலுத்தியுள்ளனர். 54 சதவீதம் பேர் ஆன்லைனில் கட்டணம் செலுத்தினர். 

43% பேர்

ஆனால், 2026 ஆம் ஆண்டில் அந்த நிலை அப்படியே மாறிவிட்டது. 59 சதவீதம் பேர் நேரில் சென்று கட்டணம் செலுத்த தொடங்கியுள்ளனர். ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் சதவீதம் 39 சதவீதமாக குறைந்துள்ளது.

59% பேர்