21 OCT 2026
Credit: Getty
உலக அளவில் அதிக மக்களால் மிகவும் அதிக ஆர்வத்துடன் வாங்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றுதான் ஐபோன்.
அதிலும் குறிப்பாக இந்தியர்கள் மத்தியில் ஐபோன்களுக்கு தனி வரவேற்பே உள்ளது. புதிய மாடல் ஐபோன்களை உடனே வாங்கும் பழக்கம் கொண்டவர்களாக சிலர் உள்ளனர்.
இந்த நிலையில் தான், இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஐபோன்களை வாங்குவதில் ஆப்பிள் நிறுவனம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது சப்ளை மற்றும் டிமாண்டை சமநிலைப்படுத்தும் வகையில், இந்த சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதாவது இந்தியா, அமெரிக்கா, சீனா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் உள்ள பொதுமக்கள் 2-க்கு மேற்பட்ட ஐபோன்களை வாங்க கூடாது என கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்த கட்டுப்பாட்டை தனது ரீடைல் ஸ்டோர்கள் மற்றும் ஆன்லைன் விற்பனை தளத்திலும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இன்னும் ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் டுயோ மீது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதாவது, இந்த ஸ்மார்ட்போன்களை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள், ஐபோன்களை முன்கூட்டியே முன்பதிவு செய்து கடைக்கு வந்து வாங்க வேண்டும் என கூறியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்களை நேரடியாக கடைக்கு வந்து வாங்க முயற்சி செய்தால், ஐபோன் வழங்கப்படாது என கூறியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் இந்திய, சீனா உள்ளிட்ட நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.