30 SEP 2026
Credit: Getty
உலக அளவில் மிகப்பெரிய நிறுவனமாக உள்ள ஆப்பிள், பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்தியாவில் தனது சேலை அறிவித்துள்ளது.
ஆப்பிள் ஐபோன்கள், மேக் புக்குகள் உள்ளிட்ட செயலிகளுக்கு இந்த சேலில் ரூ.15,000 வரை தள்ளுபடி வழங்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.
இது நேரடி விலை கழிப்பில் சேராது. மாறாக இந்த சேலில் ஆப்பிள் வழங்கும் கேஷ்பேக் மற்றும் வங்கி சலுகைகளை இது குறிக்கிறது.
இந்த சலுகைகள் ஆப்பிள் தளத்தில் கிடைக்கின்றன. இதேபோல அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டுகள் இந்த உடனடி கேஸ்பேக்கிற்கு தகுதியானவை.
இந்த சேலில் வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு No Cost EMI சலுகையையும் எதிர்ப்பார்க்கலாம்.
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் 18 ப்ரோ மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.7,000 வரை உடனடி தள்ளுபடி.
ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.1,64,900-க்கு அறிமுகமானது. இந்த நிலையில், ரூ.7,000 சலுகை மூலம் ரூ.1,57,900-க்கு வாங்கிக்கொள்ளலாம்.
ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.1,79,900-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், ரூ.7,000 தள்ளுபடி மூலம் ரூ.1,72,900-க்கு வாங்கிக்கொள்ளலாம்.
இந்த சேலில் ஆப்பிள் நிறுவனம், பழைய போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்தால் அதற்கு ரூ.81,500 வரை வழங்குகிறது.
ஐபோன் ஏர் ஸ்மார்ட்போனுக்கு ரூ.5,000 கேஷ்பேக் வழங்கப்படும் நிலையில், ஐபோன் 17 மற்றும் 17இ ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.1,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.