29 AUG 2026
Credit: GETTY
ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த மாடல் ஸ்மார்ட்போன் ஆன ஆப்பிள் ஐபோன் 18-ஐ அறிமுகம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த புதிய ஆப்பிள் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள், இந்தியாவில் இன்னும் ஒருசில நாட்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இந்த நிலையில் தான், ஆப்பிளின் ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு பிளிப்கார்டில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
ரூ.1,49,900-க்கு அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் 17 ப்ரோ மேக்ஸ் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,44,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதாவது, ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு அதன் அறிமுகம் விலையில் இருந்து ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகள் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் நபர்களுக்கு கூடுதலாக ரூ.6,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதுவே பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தால் ரூ.9,000 தள்ளுபடி வழங்கப்படும்.
இந்த ரூ.9,000 தள்ளுபடியை சேர்த்தால் ரூ.1,49,900 மதிப்புள்ள ஆப்பிள் ஐபோன் 17ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.1,35,900-க்கே வாங்கிக்கொள்ளலாம்.
பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பிளிப்கார்டில் ஐபோன் 17 ப்ரோவை வாங்கினால் ரூ.14,000 தள்ளுபடி கிடைக்கும்.
இதுவே எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பிளிப்கார்டில் இந்த ஐபோன் 17 ப்ரோவை வாங்கினால் ரூ.11,000 தள்ளுபடி கிடைக்கும்.