09 July 2026
Credit: Instagram
இளம் கதாநாயகியாக தமிழ் மற்றும் மலையாளம் சினிமாவில் படங்களில் நடித்து அசத்திவருபவர் அனிஷிமா அனில்குமார்.
இவர் தமிழில் இறுதியாக கென் கருணாஸ், இயக்கி நடித்திருந்த யூத் படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
ஆனால் இதற்கு முன் இவருக்கு தமிழில் இவருக்கு பிரபலத்தை கொடுத்த படம் சிறை (2025).
நடிகை அனிஷிமா அனில்குமார், 2023ல் வெளியான பூவன் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார்.
தொடர்ந்து மலையாளத்தில் நடித்துவந்த இவருக்கு, விக்ரம் பிரபுவின் சிறை படம் தமிழ் அறிமுகத்தை கொடுத்தது.
யூத் படத்தில் இவரின் நடிப்பை கண்டு நடிகர் தனுஷ் இவரை பாராட்டியிருக்கிறார்.
தற்போது இவர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் கீழ் மொத ராத்திரி என்ற படத்தில் நாயகியாக நடித்துவருகிறார்.
இப்படத்தில் அவர் நடிகர் ரிஷிகாந்த்திற்கு ஜோடியாக நடித்துவருகிறார். இப்படம் 2026ம் ஆண்டு இறுதியில் வெளியாகிறது.
நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நடிகை அனிஷிமா அனில்குமார், தனது ரோல் மாடல் நடிகர் யார் என தெரிவித்துள்ளார்.
நடிகை அனிஷிமா அனில்குமாரின் ரோல் மாடல் நடிகர் வேறுயாருமில்லை, உலகநாயகன் கமல்ஹாசன் தானாம்.