Credit: Instagram
15 october 2026
Credit: Instagram
டோலிவுட் சினிமாவில் சிறந்த நட்சத்திர நடிகர்களில் ஒருவராக மக்களிடையே மிகவும் பேமஸானவர் மெகா ஸ்டார் ராம் சரண்.
இவரின் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து, பேக் டூ பேக் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுவருகிறது.
இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பெடி. இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியிருந்தார்.
இதில் ராம் சரண் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் ஆச்சியம்மா என்ற வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில், பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியிருந்தது.
இப்படத்திற்கு பின் ராம் சரண் எந்த இயக்குநருடன் இணைவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புஷ்பா பட இயக்குநருடன் இணைகிறாராம்.
இயக்குநர் சுகுமார், ராம் சரணின் 17வது திரைப்படத்தை இயக்குகிறாராம். இப்படம் புஷ்பா படத்தை விடவும் பிரம்மாண்டமாக இருக்குமாம்.
அந்த விதத்தில் இப்படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை சாரா அர்ஜுனை நடிக்கவைக்க பேச்சு நடக்கிறதாம்.
மேலும் இந்நிலையில் RC 17 திரைப்படத்தின் இசையமைப்பாளர் யாராக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராம் ரேஷன் மற்றும் இயக்குநர் சுகுமார் இணையும் RC17 திரைப்படத்திற்கு தென்னிந்திய ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறாராம்.