13 July 2026
Credit: Instagram
பான் இந்திய அளவிற்கு சினிமாவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர்.
இவர் தமிழக முதல்வர் விஜய்யின் படங்கள் முதல் நடிகர் ஷாருக்கான் போன்ற பல்வேறு உச்ச பிரபலங்களின் படங்களுக்கு பணியாற்றியிருக்கிறார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், தனுஷ் நடித்திருந்த 3 என்ற படத்தின் மூலம் அனிருத் அறிமுகமானார்.
3 படத்தின் பாடல்கள் ஆல்பம் மூலம் இவருக்கு பான் இந்தியா வரை வரவேற்பு கிருந்தது. ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகளவு ட்ரெண்டானது.
தனுஷ் தயாரிக்க மற்றும் நடிக்கும் படங்களுக்கு தொடர்ந்து இசையமைப்பாளராக பணியாற்றிவந்தார்.
இவ்வாறு இசையமைப்பாளராக பணியாற்றிவந்த இவர், ஏ.ஆர்.ரஹ்மான் முதல் ஹாரிஸ் ஜெயராஜ் போன்றவர்களை முந்தினார்.
தற்போது அனிருத், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி போன்ற மொழி படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றுகிறார்.
முதல்வர் விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையையும் அனிருத் செய்திருக்கிறார்.
அனிருத் மற்றும் காவியா மாறன் இருவரும் டேட்டிங் செய்துவருவதாக 2 ஆண்டுகளுக்கும் மேல் கூறப்படுகிறது.
தற்போது இவர்கள் இருவருமே திருமணம் செய்கிறார்களாம். 2026 நவம்பர் 2ல் ஆப்பிரிக்காவில் இவர்களின் திருமணம் நடப்படாத கூறப்படுகிறது.