Credit: Instagram
11 october 2026
Credit: Instagram
மலையாளம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி, தற்போது மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வளம்பவருபவர் அனஸ்வரா ராஜன்.
இவர் மலையாள சினிமாவில் கடந்த 2017ம் ஆண்டில் வெளியான உடஹரணம் சுஜாதா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நுழைந்தார்.
இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான நிலையில், இவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது.
பின் இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் 2022ம் ஆண்டில் வெளியான சூப்பர் சரண்யா என்ற படத்திலும், மமிதா பைஜுவுடன் இணைந்து நடித்திருந்தார்.
அடுத்தடுத்து இவர் நடிக்கும் படங்கள் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதிலும் இவர் தமிழிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
நடிகை திரிஷா நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான ராங்கி என்ற படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழில் நுழைந்தார்.
மேலும் நாயகியாக இவர் நடித்த முதல் தமிழ் படம் தக்ஸ், இதில் டியூட் பட நடிகர் ஹ்ரிது ஹரூன்னுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதன் பிறகு தெலுங்கு சினிமாவில் நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். 2025ம் ஆண்டில் சாம்பியன் என்ற படத்தில் நடித்த நிலையில், பேக் டு பேக் தெலுங்கு படத்தை கைவசம் வைத்துள்ளார்.
இவரின் நடிப்பில் மட்டும் கிட்டத்தட்ட 3 க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்கள் உள்ளது. அது என்னென்ன என பார்க்கலாம்.
இவரின் நடிப்பில் இட்லலு அர்ஜுனா, சிரஞ்சீவியின் காக்க, அந்த ராமுலோரு சுசுகுந்தரு மற்றும் ரவி தேஜாவுடன் துலாபாரம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.