04 Feb 2025 

ஒரே நாளில் ஓகே சொன்ன படம் - அனஸ்வர ராஜன்

Credit: Instagram

த்ரிஷா நடித்த ராங்கி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் அனஸ்வரா ராஜன்.

இந்த நிலையில் வித் லவ் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். 

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அபிஷன் ஜீவிந்த் இதில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். 

இந்தப் படம் பிப்ரவரி 6, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. 

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்கியுள்ளார்.

மேலும் இந்தப் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார். 

இந்தப் படத்தை ஒப்புக்கொண்டதற்கான காரணம் குறித்து அனஸ்வரா ராஜன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளது.

''கதை கேட்ட பிறகு ஒரே நாளில் எதையும் யோசிக்காமல் ஒரே நாளில் ஒப்புக்கொண்ட படம் இதுதான்'' என்றார்.

''காரணம் இந்த படத்தின் கதையை இயக்குநர் மதன் எனக்கு சொன்ன விதம் பிடித்திருந்தது.''

''இது அழகான காதல் கதை. ரசிகர்களுக்கு இந்தப் படம் மிகவும் பிடிக்கும்'' என்றார்.