03 SEP 2026

தக்காளி ஒரு மாதமானாலும் அழுகாமல் இருக்க சூப்பர் கிச்சன் டிப்ஸ்!

Credit: getty

தேவைக்கு அதிகமான தக்காளிகளை ஒரே நேரத்தில் வாங்க வேண்டாம். அன்றாட பயன்பாட்டை கணக்கிட்டு, ஓரளவு காயாக இருக்கும் தக்காளிகளையும் சேர்த்து வாங்கலாம்.

தக்காளி

தக்காளியை வீட்டிற்குக் கொண்டு வந்தவுடனேயே தண்ணீரில் கழுவி வைக்கக் கூடாது. பயன்படுத்தும் போது மட்டும் கழுவுவது பூஞ்சை மற்றும் அழுகுவதை தடுக்கும்.

ஈரம்

தக்காளியை பிளாஸ்டிக் பைகளில் அடைக்காமல் துளைகள் உள்ள கூடைகளில் வைக்க வேண்டும். ஒன்றின் மீது ஒன்றாக அழுத்தாமல் போதுமான இடைவெளி விட்டு வைப்பது நல்லது.

காற்றோட்டம்

தக்காளியின் காம்பு பகுதி மேல்நோக்கி இருக்கும்படி அடுக்கி வைக்கவும். மென்மையான துணி அல்லது காகிதத்தின் மீது தனித்தனியாக வைப்பது உராய்வை குறைக்கும்.

நிலை 

லேசாக அடிபட்ட அல்லது சிறிய கீறல் விழுந்த தக்காளிகளை தனியாக பிரித்து எடுத்துவிட வேண்டும். இவற்றை நல்ல தக்காளிகளுடன் சேர்த்து வைத்தால் மற்றவையும் சீக்கிரம் அழுக தொடங்கும்.

பிரித்தல்

நன்கு பழுத்த தக்காளிகள் அறை வெப்பநிலையிலேயே இருந்தால் விரைவில் மென்மையாகிவிடும். அத்தகைய பழுத்த தக்காளிகளை மட்டும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பராமரிக்கலாம்.

குளிர்சாதனம்

தினமும் தக்காளிகளை ஒருமுறை சரிபார்த்து கரும்புள்ளிகள் அல்லது அழுகல் உள்ளவற்றை நீக்க வேண்டும். ஒரு தக்காளியில் பூஞ்சை ஏற்பட்டாலும் அது அருகில் உள்ள மற்ற தக்காளிகளையும் பாழாக்கிவிடும்.

ஆய்வு

அதிக அளவில் தக்காளி இருந்தால் அதை பச்சையாக வைப்பதற்குப் பதில் தக்காளியை வேகவைத்து அரைக்கலாம். தக்காளி ப்யூரி அல்லது தொக்கு செய்து காற்று புகாத பாத்திரத்தில் அடைத்து ஃப்ரிட்ஜில் சேமிக்கலாம்.

ப்யூரி

முழுமையாக பழுக்காத லேசான பச்சை நிறத் தக்காளிகள் அறை வெப்பநிலையிலேயே மெதுவாகப் பழுக்கும். எனவே அவற்றை ஃப்ரிட்ஜில் வைக்காமல் வெளியிலேயே காற்றோட்டமாக வைக்க வேண்டும்.

சாதகமானவை

தக்காளி ப்யூரி அல்லது தொக்கு தயாரித்து சேமிக்கும் பாத்திரங்கள் சுத்தமாகவும் ஈரமில்லாமலும் இருக்க வேண்டும்.

சுத்தம்