30 July 2025

தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலையால் இவ்வளவு நன்மைகளா?

Credit: GETTY

பச்சை வேர்க்கடலையில் உள்ள நல்ல கொழுப்புகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகின்றன.

இதயம்

உடலுக்குத் தேவையான புரதச்சத்தை பச்சை வேர்க்கடலை இயற்கையாக வழங்குகிறது. தசை வளர்ச்சிக்கும், உடல் வலிமைக்கும் இது உதவக்கூடிய உணவாகும்.

புரதம்

நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவுகிறது. செரிமானமும் சீராக நடைபெற இதன் பங்கு குறிப்பிடத்தக்கது.

நார்ச்சத்து

அளவோடு சாப்பிட்டால் அதிக நேரம் வயிறு நிறைந்த உணர்வை அளிக்கிறது. இதனால் தேவையற்ற சிற்றுண்டிகளைத் தவிர்த்து உடல் எடையை கட்டுப்படுத்த உதவும்.

எடை

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென உயர்வதை குறைக்க உதவக்கூடும். எனவே சமநிலையான உணவுமுறையில் இதை சேர்த்துக்கொள்ளலாம்.

சர்க்கரை

மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றன. தினசரி ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்யவும் இது பயனளிக்கும்.

எலும்பு

வைட்டமின் B மற்றும் நல்ல கொழுப்புகள் மூளைச் செயல்பாட்டை ஆதரிக்கின்றன. நினைவாற்றல் மற்றும் கவனத்திறனை மேம்படுத்தவும் உதவலாம்.

மூளை

இரவில் தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் தூக்கம் கெட்டு இதய ஆரோக்கியம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

இதயம்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலை செல்சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கலாம்.

நோயெதிர்ப்பு

செரிமான அமைப்பு சீராக இயங்க நார்ச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்க உதவுகிறது.

செரிமானம்