Credit: Instagram
30 october 2026
Credit: Instagram
தென்னிந்திய சினிமா வட்டார மக்களிடையே லீட் திரைப்பட நடிகராகவும், கார் ரேஸராகவும் அறியப்படுபவர் அஜித் குமார்.
இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தொடர்ந்து சினிமாவில் பணியாற்றிவருகிறார். இவரின் நடிப்பில் 63 படங்கள் வெளியாகியுள்ளது.
இறுதியாக அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. இதை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சிறப்பாக இயக்கியிருந்தார்.
இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு இறுதியிலே நிறைவடைந்த நிலையில், அஜித் கார் ரேஸ் பயிற்சியில் முழுவதுமாக ஈடுபட்டிருந்தார்.
அஜித் குமார் தனது கார் ரேஸ் அணியுடன் இத்தாலி முதல் மலேசியா வரை பல்வேறு நாடுகளில் நடைபெற்றிருந்த கார் ரேஸில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்தியாவுக்கும் மற்றும் இந்திய சினிமாவுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக பல்வேறு கார் ரேஸ் போட்டிகளில் கலந்து வெற்றிபெற்றிருக்கிறார்.
இறுதியாக லண்டனில் நடைபெற்றிருந்த கார் ரேஸ் போட்டியிலும் அஜித் குமாரின் அணி கலந்துகொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் குமாரின் கார் ரேஸ் பயிற்சி மற்றும் போட்டிகள் ஆவணப்படமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார்.
இந்த ஆவணப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசைக்க, அஜித் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.
இந்த கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படமானது 2026ல் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது 2027ல் பொங்கல் பண்டிகையோடு வெளியாகிறதாம்.