30 Jan 2025

சினிமாவுக்கு வரும் நடந்த மோசமான அனுபவம் - ஜஸ்வர்யா ராஜேஷ்

Credit: Instagram

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஆரம்பத்தில் சன் டிவியின் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக வேலை பார்த்தார். 

அதனைத் தொடர்ந்து கடந்த 2011 ஆம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். 

இந்த நிலையில் பா.ரஞ்சித்தின் அட்டகத்தி திரைப்படம் அவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.

இதனையடுத்து விஜய் சேதுபதியுடன் பண்ணையாரும் பத்மினியும் ரம்மி போன்ற படங்களில் நடித்தார். 

இளம் வயதிலேயே 2 குழந்தைகளுக்கு அம்மாவாக அவர் நடித்த காக்கா முட்டை திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. 

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் அவர் நடித்து வருகிறார். 

சினிமாவுக்கு வரும் முன் தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார். 

போட்டோ எடுக்க தன்னை அழைத்து சென்ற ஒருவர் உள்ளாடையுடன் போட்டோ எடுக்க அழைத்ததாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

தனது அண்ணனை கேட்க வேண்டும் என சொல்லிவிட்டு வெளியேறியதாக அவர் தெரிவித்துள்ளார்.