20 July 2026
Credit: Instagram
நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கோலிவுட் சினிமாவில் தொடர்ந்து தனது படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்துவருகிறார்.,
மருத்துவராக பணியாற்றிவந்த இவர், மலையாள சினிமாவின் மூலம் நடிகையாக நுழைந்தார்.
இவர் மலையாளத்தில் கடந்த 2017ம் ஆண்டில் நிவின் பாலிக்கு ஜோடியாக ஞண்டுக்களுடே நாட்டில் ஒரிடவேல படத்தில் நடித்து அறிமுகமானார்.
தொடர்ந்து மலையாளத்தில் நடித்துவந்த இவர், தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் ஆக்ஷன் படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதையடுத்து தமிழிலும் தனது நடிப்பு திறமையின் மூலம் பிரபலமானார்.
மணி ரத்னத்தின் வரலாற்றுக் காவியமான பொன்னியின் செல்வன் படங்களில் பூங்குழலி என்ற வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
அந்த வகையில், தமிழில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் கட்டா குஸ்தி 2.
விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்த நிலையில், சூப்பர் ஹிட்டாகியிருந்தது.
சமீபத்தில் பேசிய ஐஸ்வர்யா லெக்ஷ்மி, தன்னை வேதனைக்குள்ளாகிய விஷயம் குறித்து பேசியுள்ளார்.
ஐஸ்வர்யா, ஊடகங்களில் புகைப்படங்களை மார்பிங் செய்து, தரக்குறைவான கருத்துகளை பதிவிட்டது என்னை மிகவும் மனவேதனைக்கு உள்ளாக்கியது எனகூறினார் கூறினார்