07 NOV 2026
Credit: Getty
29 NOV 2026
Credit: Getty
தற்போது உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் முக்கிய அம்சமாக செயற்கை நுண்ணறிவு உள்ளது.
நிறுவனங்கள், துறைகள் மட்டுமன்றி பொதுமக்களும் தங்களது அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
ஏஐ தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துக்கொண்டே செல்லும் நிலையில், அது தொடர்பான ஆபத்துகள் குறித்து நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
அந்த வகையில் கூகுளின் முந்தைய டீப் மைண்ட் ஆய்வாளர் அலெக்ஸ் டர்னர் அதிர்ச்சியூட்டும் தகவலை கூறியுள்ளார்.
அதாவது, ஏஐ மூலம் மனிதர்கள் தங்களது கட்டுப்பாட்டை இழந்துவிடுவார்கள் என்று அலெக்ஸ் கூறியுள்ளார்.
ஏஐ பாதுகாப்பு கடமைகளை கூகுள் நிறுவனம் உறுதி செய்யாததன் காரணமாகவே, அதில் இருந்து விலகியதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில், தற்போது செயற்கை நுண்ணறிவு அம்சம் மனிதர்களின் வாழ்க்கைக்கு ஆபத்தாக மாறக்கூடும் என்று கூறியுள்ளார்.
அலெக்ஸ் கூகுளின் டீப் மைண்ட் சோதனையில் 2023 ஆம் ஆண்டு முதல் 2026 பாதி வரை பணியாற்றினார்.
இந்த நிலையில் தான், உரிய பாதுகாப்பு இல்லை என்றால் அதிக திறன் கொண்ட ஏஐ மூலம் பாதிப்புகளை சந்திக்க கூடும் என கூறியுள்ளார்.
எதிர்காலத்தை குறித்து நான் சற்று அதிக கவலை கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.