24 August 2026
Credit: Getty
தற்போதைய காலக்கட்டத்தில் உலகத்தையே ஆட்டி படைக்கும் ஒரு மிக முக்கிய அம்சமாக செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளது.
கல்வி, தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும், அனைத்து நிறுவனங்களிலும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் தான் மருத்துவ துறையிலும் செயற்கை நுண்ணறிவு அம்சம் நுழைந்துள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் பல மாற்றங்களை அது மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, இன்னும் 10 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு அம்சம் நோய்களற்ற உலகத்தை உருவாக்கும் என ஆச்சர்யமூட்டும் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
தற்போது நோய்களை கண்டறிதல், மருத்துவ தரவுகளை ஆய்வு செய்தல், புதிய மருந்துகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் தான், Anthropic நிறுவனத்தின் CEO டாரியோ அமோடெய் வெளியிட்டுள்ள ஒரு கருத்து உலகம் முழுவதும் கவனத்தை பெற்றுள்ளது.
அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் மனிதர்களை பாதிக்கும் பெரும்பாலான நோய்களுக்கு மருத்து அல்லது நிரந்தர தீர்வு காணும் சூழலை ஏஐ உருவாக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அவர் செயற்கை நுண்ணறிவு அம்சம் மருத்துவ துறையில் ஏற்படுத்த உள்ள மாற்றங்களை குறித்து மிகவும் பாசிடிவாக பேசியுள்ளார்.
குறிப்பாக மனிதர்கள் பல ஆண்டுகளாக மேற்கொள்ளக்கூடிய உயிரியல் ஆராய்ச்சிகளை செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் உதவியுடன் மிக விரைவில் முடித்துவிடலாம் என நம்புகிறார்.
புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான பிரச்னைகளுக்கு புதிய சிகிச்சை முறைகளை கண்டறிய ஏஐ உதவியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.