20 Dec 2025

நெகட்டிவ் ரோலால் பயந்தேன் - ருக்மிணி வசந்த் 

Credit: Social Media

சப்த சாகரதாச்சே எல்லோ என்ற கன்னட படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமானவர் ருக்மிணி வசந்த்.

இந்தப் படத்துக்கு பிறகு தெலுங்கு மற்றும் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

அவர் தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஏஸ் என்ற படத்திலும், சிவகார்ததிகேயனுக்கு ஜோடியாக மதராஸி படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த காந்தாரா 2 திரைப்படத்தில் ருக்மிணி நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் அவர் கனகவதி என்ற வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில் வில்லி வேடத்தில் நடித்தது தனது எதிர்காலத்தை பாதிக்குமோ என்று அவர் அஞ்சியதாக குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தனக்கு நெகட்டிவ் வேடமே கிடைக்குமோ என கவலைப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அந்தப் படத்துக்கு கிடைத்த நேர்மறை விமர்சனங்கள் அந்த எண்ணத்தை போக்கியதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

அடுத்தாக மணிரத்னம் இயக்கும் படத்தில் ருக்மிணி நடிக்கவிருக்கிறாராம்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.