17 Jan 2025
Credit: Instagram
முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஊர்வசி.
தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள ஊர்வசி தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இவரது மகள் தேஜலட்சுமியும் தற்போது திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
மலையாளத்தில் உருவாகும் சுந்தரியாயவள் ஸ்டெல்லா படத்தின் மூலம் ஹீரோயினாக தேஜலட்சுமி அறிமுகமாகியுள்ளார்.
மேலும் இவர் தனது அம்மா ஊர்வசியுடன் இணைந்து பாப்லோ பார்ட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஊர்வசி தனது மகளுடன் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து இன்ஸ்டாகிராமில் தேஜலட்சுமி கமல்ஹாசனுடனான தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவரது பதிவில், பஞ்சதந்திரம் படப்பிடிப்பு தளத்தில் கமல் தனக்கு உணவு ஊட்டி விடுவார் என நினைவுகளை பகிர்ந்தார்.
தற்போது கமல்ஹாசனை 10 நிமிடங்கள் சந்தித்தேன். அதனை என் வாழ்நாளில் மறக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.