08 Jan 2026

24 வயதில் 3 குழந்தைகளை தத்தெடுத்த ஸ்ரீலீலா - இதுதான் காரணமா?

Credit: Social Media

24 வயதிலேயே, தன் நடிப்பைத் தாண்டி மனிதநேயத்தாலும் ரசிகர்களின் மனதை வென்ற நடிகை ஸ்ரீலீலா.

மூன்று குழந்தைகளை தத்தெடுத்தது குறித்து, இப்போது முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

கலாட்டா பிளஸ்க்கு அளித்த பேட்டியில் இது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

கன்னட படப்பிடிப்பின் போது, ஒரு ஆசிரமத்திற்கு சென்ற பிறகு இந்த முடிவு எடுத்ததாக அவர் கூறினார்.

தற்போது, அந்த குழந்தைகள் ஆசிரமத்தில்தான் இருக்கிறார்கள். நாங்கள் போனில் பேசிக்கொள்கிறோம்.

நான் அவ்வப்போது சென்று அவர்களை சந்திப்பேன் என்றார்.

தற்போது அவர் பராசக்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவிருக்கிறார்.

சிவகார்த்திகேயன், ரவிமோகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி, ஜனவரி 10 அன்று வெளியாகிறது.

இந்தப் படம் ஹிந்தி திணிப்பிற்கு எதிராக மாணவர் அமைப்பு நடத்திய போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

ஜனநாயன் வெளியாகாத நிலையில் பராசக்தி திரைப்படம் அதிக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.