11 Feb 2025 

25 ஆண்டுகளாக நிறைவேறாத கனவு - நடிகை ஸ்ரேயா சரண்

Credit: Instagram

எனக்கு 20, உனக்கு 18 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஸ்ரேயா. 

அதனைத் தொடர்ந்து மழை படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். 

அந்தப் படம் அவருக்கு வரவேற்பு கிடைக்காத நிலையில் சிவாஜி திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. 

சிவாஜி படத்தில் அவர் ஹீரோயினாக ஒப்பந்தமான நிலையில் அவருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

விஜய், தனுஷ், விக்ரம், விஷால், ஜீவா என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தார். 

ஒரே நேரத்தில் மாமனார் ரஜினிகாந்த், மருமகன் தனுஷ் ஆகியோருடன் நடித்தது அப்போது பேசுபொருளானது. 

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

25 ஆண்டுகளாக நிறைவேறாத கனவு குறித்து ஸ்ரேயா விளக்கமளித்துள்ளார்.

நடிகை ஸ்ரேயா சரண் அடிப்படையில் ஒரு நடனக் கலைஞர்.

இந்த நிலையில்  ஒரு நடன கலைஞராக நடிக்க வேண்டும் என்ற ஆசை இதுவரை நிறைவேறவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.