28 October 2026

ஏன் தென்னிந்திய நடிகைகளையே நடிக்க வைக்கக்கூடாது? 

Credit: Instagram

இந்தி சினிமாவில் கடந்த 2005-ம் ஆண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கினார் நடிகை ராதிகா ஆப்தே.

அதனைத் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு பெங்காலி, மராத்தி மற்றும் இந்தி மொழிகளிலேயே தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2010-ம் ஆண்டு தெலுங்கு மொழியில் நடித்ததன் மூலம் தென்னிந்திய மொழியில் நடிக்கத் தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து நடிகை ராதிகா ஆப்தே 2012-ம் ஆண்டு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவான தோனி படத்தில் நடித்தார்.

ஆல் இன் ஆல் அழகு ராஜா மூலம் நேரடியாக தமிழ் படத்தில் நடிக்கத் தொடங்கினார் நடிகை ராதிகா ஆப்தே.

அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றிச் செல்வன், கபாலி, சித்திரம் பேசுதடி 2, மேரி கிருஸ்துமஸ் ஆகியப் படங்களில் நடித்து உள்ளார்.

இறுதியாக இந்தி மொழியில் உருவான லஸ்ட் ஸ்டோரிஸ் 3 என்ற ஆந்தாலஜி படத்தில் ஒரு பகுதியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நடித்துள்ள அக்கா தொடர் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் புரோமோஷனுக்காக பேட்டிகளை அளித்து வரும் இவர் தென்னிந்திய மொழிகளில் வட இந்திய நடிகைகள் நடிப்பது குறித்து பேசியுள்ளார்.

மேலும் ஏன் தென்னிந்திய நடிகைகளையே தென்னிந்திய மொழி படங்களி நடிக்க வைக்கக்கூடாது? அவர்கள் மிகவும் திறமையானவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.