11 Jan 2026

பிரபாஸுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை - நடிகை வருத்தம்

Credit: Social Media

பிரபாஸின் நடிப்பில் வெளியான ராஜா சாப் திரைப்படம் கலவைான விமர்சனங்களை பெற்று வருகிறது

மாருதி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்தி குமார் என 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என பிரபல நடிகை வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகையான பாயல் ராஜ்புத் தான் அவர்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கண்ணீர் விட்டு அழுவதுபோல இருக்கிறது.

இந்த வீடியோவை பகிர்ந்த அவர் படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஆர்எக்ஸ் 100 படத்தின் மூலம் பிரபலமானார்.

தெலுங்கில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.

தமிழில் இருவர் உள்ளம் என்ற படத்தில் நடித்துள்ளார்.