10 Jan 2026
Credit: Social Media
பூ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பார்வதி.
சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தம வில்லன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் தங்கலான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
மலையாளம், தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், ஹிந்தி மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான யஷ்ஷின் டாக்சிக் பட அறிமுக வீடியோவால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
டாக்சிக் டீசரில் ஹீரோவின் மாஸ் எண்ட்ரிக்கு பெண்ணின் உடலை பயன்படுத்துவதா என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பார்வதியின் பழைய பதிவுகளின் கீழ் பலரும் அவதூறு தெரிவித்து வருகின்றனர்.
பெண்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்துவரும் பார்வதி அமைதியாக இருப்பதாக கண்டனம் தெரிவிக்கின்றனர்.
டாக்சிக் படத்தை பிரபல மலையாள நடிகையும், இயக்குநருமான கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார்.
டாக்சிக் பட சர்ச்சைக்கு பிறகு கீது மோகன்தாஸை பார்வதி சமூக வலைதளங்களில் அன்ஃபாலோ செய்ததாக கூறப்படுகிறது.