30 Mar 2025
Credit: Instagram
கடந்த 2009-ம் ஆண்டு வெளியான திரு திரு துறு துறு என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஜனனி.
அதனைத் தொடர்ந்து நடிகர் சிலம்பரசனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலும் சிறிய வேடத்தில் ஜனனி நடித்து இருந்தார்.
டந்த 2011-ம் ஆண்டு இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் நடித்து இருந்தார்.
இந்தப் படத்தில் பயந்த போலீஸ் கதாபபத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார்.
ஜனனி நடிப்பில் வெளியான தெகிடி மற்றும் அதே கண்கள் என பலப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை ஜனனிக்கு ரோஷன் ஷியாம் என்பவருடன் கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமண நிச்சயம் நடைப்பெற்றது.
இந்த நிலையில் மார்ச் 30 அன்று உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
தனது திருமண புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.