08 Feb 2025 

என்னால் நிம்மதியாக தூங்கமுடியல - பூமிகா உருக்கம்

Credit: Instagram

நடிகர் விஜய்யின் பத்ரி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூமிகா.

பின்னர் ஸ்ரீகாந்த் அறிமுகமான ரோஜா கூட்டம் படத்தில் ஹீரோவானார். 

அந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் அவரைக் கொண்டு சேர்த்தது. 

பின்னர் சிறிய இடைவேளைக்கு பிறகு சூர்யாவுக்கு ஜோடியாக ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்தார். 

அந்தப் படத்தில் இடம் பெற்ற முன்பே வா இன்றளவும் காதலர்களுக்கு தேசிய கீதமாக இருந்து வருகிறது.

தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 

குறிப்பாக எம்.எஸ்.தோனி அன்டோல்டு ஸ்டோரி படத்தில் தோனியின் சகோதரி வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது யுபோரியா என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் பட விழாவில் பேசிய அவர் என்னால் தூங்க முடியவில்லை. நள்ளிரவில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறேன் என்று அழத் தொடங்கினார்.

இதனையடுத்து அவரை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் சமாதானப்படுத்தினர். இது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.