25 Feb 2025 

ஆர்யாவுடன் நடிக்க மறுத்த நடிகை 

Credit: Instagram

எங்கள் வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் ஆர்யா கலந்து கொண்டார்.

100 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ளலாம் என்பது விதி. 

இதில் அபர்ணதி வெற்றி பெற்றார். இந்த நிலையில் ஆர்யா அவரை திருமணம் செய்துகொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிகழ்ச்சியின் மூலம் அபர்ணதிக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன. 

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக ஜெயில் படத்தின் மூலம் அறிமுகமானார். 

தொடர்ந்து இறுகப்பற்று, சாமானியன், மாய புத்தகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

இந்த நிலையில் தான் ஆர்யாவுடன் நடிக்க விருப்பமில்லை என அவர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ஒரு ரியாலிட்டி ஷோவில் ஆர்யாவுடன் 100 நாட்கள் கலந்துகொண்டேன் என்றார். 

மேலும் அவருடன் ஒரு பொய் கதையை வைத்து ரொமான்ஸ் அல்லது தங்கை கதாப்பாத்திரத்தில் நடிக்க விருப்பமில்லை என்றார்.

அதனால் ஆர்யாவுடன் இணைந்து நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.