Credit: Instagram

26  November 2026

தனுஷின் டி56 திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் இணைந்த நடிகர்?

Credit: Instagram

திரைத்துறையில் வெறும் நடிகராக மட்டுமல்லாமல், பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து ரசிகர்களை கவர்ந்துவருபவர் தனுஷ்.

இவரின் நடிப்பில் தமிழில் இதுவரையில் கிட்டத்தட்ட 55 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் இறுதியாக வெளியான படம் ஓ.எம்.

இதை தமிழ் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க, தனுஷ் நடிகராக மற்றும் தயாரிப்பாளராக இந்த படத்தில் பணியாற்றியுள்ளார்.

இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா மற்றும் இந்திரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படமானது கடந்த 2026 நவம்பர் 20ம் தேதியுடன் திரையரங்குகளில் வெளியான நிலையில், இதுவரை உலகமெங்கும் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

நடிகர் தனுஷ் இந்த படத்திற்கு பிறகு தமிழில் நடித்துவரும் படம்தான் டி56. இதை லப்பர் பந்து பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார்.

இதில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தமிழ் இளம் நடிகை ப்ரீத்தி முகுந்த நாயகியாக நடித்துவருகிறார்.

மேலும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா. காளி வெங்கட், உறியடி விஜய் குமார் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் ஷூட்டிங் மதுரையில் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், அதிரடி ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகிறதாம்.

இந்த டி56 படத்தில் தனுஷின் உச்ச ரசிகர் மற்றும் மீசையமுறுக்கு படத்தில் ஆதியின் தம்பியாக நடித்த, நடிகர் ஆனந்த் ராம் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.