13 OCT 2026

Credit: Getty

ரூ.20,000 மாத சம்பளம் இருந்தால் தனிநபர் கடன் பெற முடியுமா?

பலரும் தங்களுக்கு ஏற்படும் திடீர் மருத்துவச் செலவு, திருமணம் அல்லது குடும்ப தேவைகளுக்காக தனிநபர் கடன் பெறலாம் என நினைக்கின்றனர். 

தனிநபர் கடன்

அவ்வாறு சில காரணங்களால் தனிநபர் கடன் பெற நினைக்கும் நபர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன. 

அம்சங்கள்

பலரும் தங்களுக்கு மாத ஊதியம் ரூ.20,000 சம்பளம் இருந்தால், தனிநபர் கடன் கிடைக்குமா என யோசிக்கின்றனர்.

ரூ.20,000 

ஒருவர் மாதம் ரூ.20,000 சம்பளம் வாங்கினால் அவரால் தனிநபர் கடன் பெற முடியும், ஆனால் அதற்கு சில காரணிகள் அவசியமாக உள்ளன. 

காரணிகள்

அதாவது, ஒருவருடைய மாத சம்பளம், சிபில் ஸ்கோர், வேலை விவரம் மற்றும் ஏற்கனவே செலுத்தி வரும் இஎம்ஐ ஆகியவை அடிப்படையாக உள்ளது.

சிபில் ஸ்கோர்

மாதம் ரூ.20,000 சம்பளம் வாங்கும் ஒருவரால் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை தனிநபர் கடன் பெற முடியும். 

ரூ.2-3 லட்சம்

ஆனால், அவ்வாறு ரூ.2 அல்லது ரூ.3 லட்சம் வரை கடன் பெற வேண்டும் என்றால் அந்த நபரின் கிரெடிட் ஸ்கோர் சிறந்ததாக இருக்க வேண்டும்.

கிரெடிட் ஸ்கோர்

ஆனால், ஒருசில வங்கிகள் தனிநபர் கடன் பெற ஒருவர் குறைந்தது ரூ.25,000 மாத சம்பளத்தை கொண்டு இருக்க வேண்டும் என கூறுகின்றன.

ரூ.25,000

உதாரணமாக 15 சதவீத ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சம் கடன் வாங்கும் பட்சத்தில் மாதம் ரூ.6,933 செலுத்த வேண்டும்.

இஎம்ஐ

எனவே, மாத செலவு ஆகியவற்றை கணக்கில் கொண்டு அனைத்து பொருத்தமாக இருக்கும் பட்சத்தில் கடன் பெறலாம்.

மாத செலவு