11 July 2025

உங்கள் நுரையீரலை நச்சு நீக்குவது எப்படி..?

Credit: Freepik

தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி, லேசான உடற்பயிற்சி செய்வது நுரையீரல் நன்றாக செயல்பட உதவும்.

நடைப்பயிற்சி

ஆழ்ந்த சுவாச பயிற்சிகள் நுரையீரல் கொள்ளளவை அதிகரிக்க உதவும்.

சுவாச பயிற்சி

போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால், சுவாச பாதைகளில் உள்ள சளி நீர்த்துப்போகும்.

தண்ணீர்

நுரையீரலை பாதுகாக்க புகைப்பிடிப்பதை நிறுத்துவது மிக முக்கியமான விஷயம்.

புகைப்பிடித்தல்

சிட்ரஸ் பழங்கள், கீரை மற்றும் பிரக்கோலி போன்ற ஆண்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்த உணவுகள் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

நுரையீரல்

தூசி மற்றும் மாசுபட்ட பகுதிகளில் வெளியே செல்லும்போது மாஸ்க் அணிவது முக்கியம்.

மாஸ்க்

தவறாமல் வீட்டை சுத்தம் செய்வதும், அறைகளில் போதுமான காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்யவும்.

காற்றோட்டம்

வீட்டை சுத்தம் செய்யும்போது துணி அல்லது மாஸ்க் அணிவது நுரையீரலுக்கு ஆரோக்கியமானது.

துணி

போதுமான தூக்கமும் சமச்சீரான வாழ்க்கை முறையும் நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும்.

தூக்கம்

இதுபோன்ற சிறுசிறு அன்றாட பழக்கங்களை கடைப்பிடிப்பதன்மூலம், உங்கள் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆரோக்கியம்