30 Jun 2025
Credit: Freepik
வெங்காயம் நறுக்கும்போது எரிச்சலுடன் கண்ணீர் வர தொடங்கும். இதை தவிர்ப்பதற்கான சில குறிப்புகள் இதோ!
சமையலின்போது வெங்காயத்தை வெட்டுவதால் பலரும் கண்ணீர் வடிக்கின்றனர். இதுமட்டுமின்றி, அதீத எரிச்சலும் ஏற்படும்.
இதற்கு வெங்காயத்தில் உள்ள சின் புரோபேன்நீத்தியல் எஸ் ஆக்ஸைடு என்ற வேதிப்பொருள் ஆகும்.
அதன்படி, சில வழிமுறைகளை பயன்படுத்தி கண்ணீர் வரலாம் வெங்காயத்தை எளிதாக வெட்டலாம்.
வெங்காயத்தை நறுக்குவதற்கு முன் 15 முதல் 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.
வெங்காயத்தை நறுக்குவதற்கு முன் குளிர்சாதன பெட்டியில் வைத்து வெட்டலாம்.
வெங்காயத்தை நறுக்கும்போது சூயிங்கம் மென்றாலும், அதனால் எந்த இரசாயன விளைவும் ஏற்படாது என்று கூறப்படுகிறது.
வெங்காயத்தை நறுக்கும்போது நீங்கள் கண்ணாடி அணிந்து கொள்வதாலும் கண்ணீர் வராது.
இது வெங்காயத்தில் உள்ள வேதிப்பொருள் உங்கள் கண்களை நேரடியாக சென்றடைவதை தடுக்கும்.
வெங்காயத்தை 2 துண்டுகளாக நறுக்கி, ஒரு துண்டை தரையில் வைப்பதும் கண்ணீர் வராமல் தடுக்கும்.