Credit: Instagram

02 october 2026

அக்டோபர் 1 முதல் 8 முக்கிய நிதி மாற்றங்கள்  

Credit: Pixabay

எஸ்பிஐ சம்பளக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பிற வங்கி ஏடிஎம்களில் இலவச பரிவர்த்தனை 5 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

பணம் எடுப்பது மட்டுமின்றி, பிற வங்கி ஏடிஎம்களில் பேலன்ஸ் செக் செய்வது போன்ற நிதி சாராத பரிவர்த்தனைகளும் இந்த வரம்பில் அடங்கும்.

அதிக மதிப்புள்ள எஃப்டிகளுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

அக்டோபர் 15 முதல் 2,000க்கு மேல் வணிகர் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணம் பொருந்தும்.

நபருக்கு நபர் பணப் பரிமாற்றங்களுக்கு தற்போதைய இலவச சேவை தொடரும்.

 புதிய என்பிஎஸ் கணக்குகளுக்கு ஒவ்வொரு பிஆர்ஏஎன் எண்ணுக்கும் ரூ.200 ஒருமுறை பதிவுக் கட்டணம் வசூலிக்கப்படும்.

மானிய விலையில் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் பெறுவதற்கு ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடித்திருப்பது முக்கியமாகிறது.

ஏடிஎம், யுபிஐ, எஃப்டி, என்பிஎஸ் மற்றும் எல்பிஜி தொடர்பான இந்த மாற்றங்கள் பொதுமக்களின் அன்றாட நிதிப் பரிவர்த்தனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.