05 Nov 2026
Credit: Pexels
காலையில் எழுந்தவுடன், நாம் அறியாமலேயே சில காரியங்களை செய்கிறோம்.
இது நமது சிறுநீரகங்களை நேரடியாக பாதிப்படைய செய்கிறது. இந்த பழக்கங்களை மாற்றுவதன்மூலம், சிறுநீரகங்களை பாதுகாக்கலாம்.
8 முதல் 10 மணிநேரம் தூங்குவதால், தண்ணீர் குடிக்காமல் இருப்பது நீரிழப்பை ஏற்படுத்தி, சிறுநீரகத்திற்கு பிரச்சனையை கொடுக்கும்.
எனவே, காலையில் எழுந்ததும் வாயை சுத்தப்படுத்தி நிறைய தண்ணீர் குடிப்பது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவும்.
காலையில் நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது உங்கள் உடல் நலத்திற்கு ஆபத்தானது.
அடிக்கடி அல்லது நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது சிறுநீரக பிரச்சனைகளை உண்டாக்கும்.
வெறும் வயிற்றில் வலி நிவாரணிகளை உட்கொள்வதும் சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
உடற்பயிற்சிக்கு பிறகு தண்ணீர் குடிக்காமல் இருப்பது உடலில் உள்ள நீர் மட்டத்தை குறைத்து, சிறுநீரகத்தில் தொல்லை கொடுக்கலாம்.
பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுகளை உண்பது ஆபத்தானது. இதில் காணப்படும் அதிகளவிலான உப்புகள் சிறுநீரகத்தில் ஆபத்தை விளைவிக்கும்.
அதன்படி, புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.