02 SEP 2026
Credit: getty
அத்திப்பழத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைத்து, குடலை ஆரோக்கியமாக வைக்கிறது.
இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகின்றன. கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதயம் தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
அத்தியில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் இருப்பதால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு தேய்மானத்தை தடுக்கின்றன.
குறைந்த கிளைசெமிக் குறியீடு (GI) கொண்ட பழமாக அத்திப்பழம் திகழ்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
இதில் இரும்புச்சத்து அதிகளவில் நிறைந்துள்ளதால் உடலின் இரத்த அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது. இரத்தசோகையால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது சிறந்த இயற்கை தீர்வாக அமைகிறது.
குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்டிருப்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது மிகவும் உகந்த சத்தான உணவாகும்.
வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் சருமத்திற்கு இயற்கை பொலிவைத் தருகிறது. முகப்பரு, சரும சுருக்கம் மற்றும் முதுமை தோற்றத்தைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.
உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
அத்திப்பழம் ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை உயர்த்தவும், பெண்களின் ஹார்மோன் சமநிலைகளுக்கும் உதவுகிறது.
இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி தொகுப்புகள் தலைமுடியின் வேர்களை வலுப்படுத்துகின்றன. முடி உதிர்வதைக் குறைத்து கூந்தலை அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் வளர செய்கிறது.