06 Jun 2025

ஏசி கரண்ட் பில்லைப் பாதியாகக் குறைக்க 10 ரகசிய வழிகள்!

Credit: GETTY

வீட்டில் ஏசியைப் பயன்படுத்தும்போது அதை 24 டிகிரி செல்சியஸில் இயக்குவது மிகவும் உகந்தது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வெப்பநிலை

மின்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு முக்கிய அமைப்பானது ஏசியை 24 டிகிரியில் இயக்கப் பரிந்துரைத்துள்ளது.

பரிந்துரை

ஏசியின் வெப்பநிலையை இயல்பு நிலையை விட ஒரு டிகிரி செல்சியஸ் குறைக்கும்போது 6 சதவீத மின்சாரம் கூடுதலாகச் செலவாகும்.

கூடுதல் செலவு

நீங்கள் புதிய ஏசி வாங்கத் திட்டமிட்டால், 5 நட்சத்திர மதிப்பீடு கொண்ட இன்வெர்ட்டர் ஏசியை வாங்குவது நல்லது.

இன்வெர்ட்டர்

ஏசியைப் பயன்படுத்தும்போது அதனுடன் சேர்த்து சீலிங் ஃபேனையும் (மின்விசிறி) இயக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

மின்விசிறி

மின்விசிறியை இயக்குவதன் மூலம் அறையின் மூலை முடுக்கெல்லாம் குளிர்ந்த காற்று எளிதாகச் சென்றடையும்.

குளிர்ச்சி

ஏசி மற்றும் மின்விசிறியைச் சேர்த்துப் பயன்படுத்தும்போது ஏசிக்குக் கொடுக்கும் அழுத்தத்தைக் குறைக்கலாம்.

சேமிப்பு

இரவில் தூங்கும்போது ஏசியில் உள்ள 'ஸ்லீப்' (Sleep Mode) என்ற சிறப்புப் பயன்பாட்டை அவசியம் உபயோகப்படுத்த வேண்டும்.

ஸ்லீப்-மோட்

இரவில் நேரம் செல்லச் செல்ல வெளியிலும் குளிர்ச்சி அதிகரிப்பதால் ஸ்லீப் மோட் வசதி உடலுக்குத் தேவையான வசதியைத் தரும்.

வசதி

ஏசியின் ஃபில்டர்கள் மற்றும் உட்புறப் பாகங்களைத் தொடர்ச்சியாகவும் முறையாகவும் சுத்தம் செய்து பராமரிப்பது அவசியமாகும்.

பராமரிப்பு