22 Oct 2026

முகம் பளபளக்க வேண்டுமா? இந்த குறிப்புகளை மறந்தும் பண்ணாதீங்க!

Credit: freepik

முகத்தைப் பொலிவாக்க எலுமிச்சைச் சாற்றை நேரடியாகத் தடவுவது சரும எரிச்சல், சிவத்தல் மற்றும் கரும்புள்ளிகளை ஏற்படுத்தலாம்.

எலுமிச்சை

பருக்களைப் போக்க பற்பசையைப் பயன்படுத்துவது தற்காலிகமாக அவற்றை உலரச் செய்தாலும், எரிச்சல் மற்றும் சரும உரிதலை அதிகரிக்கலாம்.

பற்பசை

முகத்தை ஸ்க்ரப் செய்ய பேக்கிங் சோடாவைப் பயன்படுத்துவது சருமத்தின் இயற்கையான pH சமநிலையைப் பாதித்து வறட்சியை ஏற்படுத்தலாம்.

பேக்கிங் சோடா

பருக்களை நீக்க பச்சைப் பூண்டை நேரடியாக முகத்தில் தடவுவது கடுமையான எரிச்சல், கொப்புளங்கள் மற்றும் ரசாயனக் காயங்களை ஏற்படுத்தக்கூடும்.

பூண்டு

எண்ணெய்கள் மற்றும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே சன்ஸ்கிரீன் தயாரிப்பது புறஊதாக் கதிர்களிலிருந்து போதுமான பாதுகாப்பை வழங்காது.

சன்ஸ்கிரீன்

காபித் தூள், சர்க்கரை போன்றவற்றைக் கொண்டு அடிக்கடி முகத்தைத் தேய்ப்பது சருமத்தில் நுண்ணிய காயங்களை ஏற்படுத்தி, உணர்திறனை அதிகரிக்கலாம்.

ஸ்க்ரப்

 இணையத்தில் வைரலாகும் அழகுக் குறிப்புகளைச் சருமத்தின் தன்மையை அறியாமல் பின்பற்றுவது சருமப் பிரச்சினைகளை அதிகரிக்கலாம்.

குறிப்புகள்

தவறான பொருட்களைப் பயன்படுத்துவது சருமத்தின் இயற்கையான பாதுகாப்பு அடுக்கைப் பாதித்து வறட்சி மற்றும் சிவத்தலை ஏற்படுத்தலாம்.

சருமப் பாதுகாப்பு

எரிச்சல் மற்றும் அழற்சியை ஏற்படுத்தும் வீட்டு வைத்தியங்கள், குறிப்பாக இந்திய சருமத்தில், கரும்புள்ளிகள் மற்றும் நிறமாற்றத்தை அதிகரிக்கலாம்.

நிறமாற்றம்

மென்மையான க்ளென்சர், மாய்ஸ்சரைசர், சன்ஸ்கிரீன் ஆகியவற்றைப் பயன்படுத்தி, நீடிக்கும் சருமப் பிரச்சினைகளுக்கு ஆலோசனையைப் பெறுவது சிறந்தது

பராமரிப்பு